அண்ணனை கொடூரமாக கொலை செய்து தீயிட்டு கொழுத்திய தம்பி

keerthi
0


 மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தனது சகோதரனை தடியால் தாக்கி கொலை செய்து உடலை எரித்ததாக சந்தேகிக்கப்படும் இளைய சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மனம்பேரிகே கருணாதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சகோதரன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான சகோதரன் ஆகிய இருவரின் வீடுகளும் ஒரே காணியில் அமைந்துள்ளதுடன் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

அவர் மாதம் ஒருமுறை கிராமத்து வீட்டுக்கு வந்து இலவங்கப்பட்டை அரைத்து பணத்தை எடுத்துக்கொண்டு தெஹியத்தகண்டிக்கு செல்வதாக கூறப்படுகிறது.

  அத்தோடு  கடந்த 28ஆம் திகதி வீட்டுக்கு வருவதாக கூறியும் அவர் வரவில்லை என அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

 அத்தோடு   28ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது சகோதரனை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் அவரது உடலுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையில் சந்தேக நபரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் அவருடன் பகையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top