இலங்கையில் தீவிரமாக பரவும் டெங்கு ! சுகாதாரத்துறையின் கோரிக்கை

Thusi
0


இலங்கையில்  இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 11 வரையிலான நிலவரப்படி, இந்த ஆண்டில்  மொத்தம் 80,222 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு  கொழும்பு மாவட்டத்தில் இருந்து 16,948 ஆக பதிவாகியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மேல் மாகாணத்தில் 37,216 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மாகாண ரீதியாக அதிகபட்சமாக, டிசம்பர் மாதத்தில் 3,734 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top