பாடசாலை மாணவிகளை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

tubetamil
0

 நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து மாணவிகளை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரிலே அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆரம்பக் கட்ட விசாரணை

கிதுல்லே பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய மாணவிகளையும் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுவருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top