பாடசாலையில் பையை திறந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

keerthi
0

 



ஹிங்குராக்கொடை புறநகர் பாடசாலையொன்றில் 8 தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரின் புத்தகப் பையில் அதி விஷப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹிகுராக்கொட கல்வி வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 எனினும்   வழக்கம் போல், காலையில் பாடசாலைக்கு வந்த சிறுமி, புத்தகத்தை எடுக்க பையை திறந்த போது, பைக்குள் ​​ஏதோ குளிர்ச்சியாக கையில் சிக்கியுள்ளது. 

 அப்போது, ​​அதில் பாம்பு இருப்பதைப் பார்த்து சிறுமி அலறி துடித்ததையடுத்து, ஆசிரியைகள், பாம்புடன் இருந்த புத்தகப் பையை வகுப்பறையில் இருந்து எடுத்துச் சென்று பாம்பை காட்டுக்குள் விடுவித்துள்ளனர். 

சிறுமியின் வீட்டில் புத்தகப் பைக்குள் பாம்பு ஊர்ந்து சென்றிருக்கலாம் எனவும் நொடிப்பொழுதில் அந்தப் பெண் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top