ஜனாதிபதியினால் புதிய நியமனங்கள்..!!

tubetamil
0

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை சற்றுமுன்னர் நியமித்துள்ளார்.


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களும், 2 பிரதம செயலாளர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கல்வி அமைச்சின் செயலாளராக வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சி. மொஹமட் நஃபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டபிள்யூ.பி.பி. யசரத்ன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பண்டிகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கல்வி அமைச்சின் செயலாளராக பி.கே.பி.சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன நியமிக்கப்பட்டார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளராக பி.கே.பி. சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டார்

மேலும், பல புதிய தலைமைச் செயலாளர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகரவும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ்.எல்.டி.கே.விஜேசிங்க ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top