நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

keerthi
0

 



இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

எனினும்   இன்றைய தினத்திற்கான காலநிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top