யுக்திய சுற்றிவளைப்பின் பெறுபேறுகள் வௌியானது..!!

tubetamil
0

 யுக்திய சுற்றிவளைப்பின் கீழ், நேற்று (28) காலை முதல் இன்று அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,467 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ் போதைப்பொருள், 03 கிலோ 637 கிராம் கஞ்சா, 103,793 கஞ்சா செடிகள், 342 கிராம் மாவா மற்றும்
562 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் கைது செய்யப்பட்ட 56 சந்தேக நபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின்  அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் போதைக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 164 சந்தேகநபர்கள் இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, “யுக்திய” நடவடிக்கையின் போது வீடுகளை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 15,222 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 755 பேர் தடுப்புக் காவல் உத்தரவை பெறவுள்ள நிலையில் மற்றும் 1,134 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பப்படவுள்ளனர்.

177 சந்தேக நபர்களுக்கு எதிராக சொத்து விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top