மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு

keerthi
0



இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி  மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மதுவரி உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 எனினும்    இதற்கிடையில், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி உத்தரவு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top