மயங்கி விழுந்த முதியவர் மரணம்

tubetamil
0




துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை(14) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்,  வடமராட்சி அல்வாயை சேர்ந்த வள்ளி சின்னத்தம்பி (வயது 61) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் கடந்த 11ஆம் திகதி பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்தவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ,  சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். 

அதேவேளை,  யாழ்ப்பாணம் - பொன்னாலை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த இரு முதியவர்கள் இருவர், கடந்த புதன்கிழமையன்று  திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top