எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

tubetamil
0

 


புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top