யாழில் இருந்து சென்று வெற்றியை தட்டி தூக்கிய கில்மிஷா: யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு!

keerthi
0 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி, ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இது தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்து யார் டைட்டிலை வென்றுள்ளார்கள் என சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் குழந்தைகளின் இசை திறமையை அறிய வைக்கும் நிகழ்ச்சியாக 'சரிகமப' காணப்படுவதோடு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர். 

அதன்படி, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் கால் பதித்துள்ளதோடு, ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

இதில் தற்போது கில்மிஷா முதலாம் இடத்தையும் ருத்ரேஷ் இரண்டாம் இடத்தையும் சஞ்சனா மூன்றாம் இடத்தையும் தட்டி தூக்கி உள்ளார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top