எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் இப்போது தரமான நடிகராக கலக்கி வருகிறார்.
இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை வெளிக்காட்டிய இவர் இப்போது நடிப்பில் எல்லோரையும் அசத்தி வருகிறார். இவர் முதன்முதலாக இயக்கிய வாலி திரைப்படம் அஜித்-சிம்ரனுக்கும் ஒரு வெற்றிப்படமாக பின் விஜய்-ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கி பெரிய அளவில் வெற்றிக்கண்டார். நியூ, அன்பே ஆருயிரே என படங்கள் இயக்கி சில படங்களில் நாயகனாக நடித்தும் வந்தார்.
இடையில் சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்த எஸ்.ஜே.சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்ட ஆரம்பித்தார்.
மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என அண்மையில் வெற்றிப்படங்களில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யா தனது காதல் தோல்வி குறித்து ஓரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
காதல் தோல்வி
அன்பே ஆருயிரே படக்கதையும் என் காதல் கதையும் ஏறக்குறைய ஒன்று தான், அதனால் தான் அந்த கதையை எடுத்தேன். என் காதல் தோல்வி பற்றி தெரிய வேண்டும் என்றால் அந்த படத்தை பாருங்கள்.
ஒரு இரவு விருந்துக்காக என் காதலி ஏற்பாடு செய்தார், அந்த நேரம் பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து போன் வந்தது, இப்போது ப்ரீயா இருக்கேன் உடனே வாருங்கள் என்றார். நான் காதலியிடம் அவசர வேலை என்று கூறி கிளம்பிவிட்டேன், இரவு 12 வரை மீட்டிங் இருந்தது.
அதை முடித்துவிட்டு காதலியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினேன், அப்போது அவள் இது ஒன்றும் சத்திரம் இல்லை என்று சொல்லி கதவை மூடிவிட்டார்.
அப்போது மூடிய என் இதயம் இப்போது வரை மூடியே இருக்கிறது என்று தனது காதல் தோல்வி குறித்து பகிர்ந்திருக்கிறார்.