தாய்வான் தேர்தல்களில் தலையிடும் சீனா

keerthi
0

 


தாய்வானில் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் முயற்சிகளை  சீனா   முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி மாதம் 13 ஆம் திகதி அதிபர் மற்றும் பொதுத்தேர்தல்கள் தாய்வானில் நடைபெற உள்ளன.

இவ்விடயம் தொடர்பாக தாய்வான் அதிகாரிகள் தெரிவிக்கையில்,

“இத்தேர்தல்களில் போட்டியிடும் சீன சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் தாய்வான் அரசியல்வாதிகள் குறைந்த செலவில் சீனாவுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதத்தில் தாய்வானின் நீரிணைப்பகுதியிலும் கடற்பரப்பிலும் சீன படையினரின் நடமாட்டங்களும் ஆராய்ச்சி கப்பல்களின் பிரசன்னமும் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவை உண்மையான உளவியல் போரென தாய்வான் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தாய்வான் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் 12 போர் விமானங்களும் வானிலை பலூனும் தம்மை கடந்து சென்றதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top