அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கான அறிவிப்பு

keerthi
0

 


அஸ்வெசும திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும்     இதன் காரணமாக ஏனைய பயனாளிகளுக்கான நன்மைகள் எந்த வகையிலும் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

அத்தோடை, அஸ்வெசும விண்ணப்பங்களை கணணி மயமாக்கியதில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்ய ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top