பிக் பாஸில் ஆரம்பமாகிய Ticket To Finale... முதல் டாஸ்க் என்ன தெரியுமா?

tubetamil
0

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்கள் எதிர்பார்த்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். தற்போது 70 நாட்களை கடந்து செல்லும் நிலையில், வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் நபர் அடுத்துவரும் வாரங்களில் நாமினேஷன் ஆகாமல் நேரடியாக ஃபைனல் வாரத்திற்கு சென்றுவிடுவார்கள்.

இதனால் டிக்கெட்டை பெறுவதற்கு சரியான போட்டி நிலவி வருகின்றது. இதன் முதல் டாஸ்க்காக போட்டியாளர்கள் கடிகாரமாக மாறியுள்ளனர். ஆக மொத்தம் இந்த வாரம் பார்வையாளர்களுக்கு பயங்கர விறுவிறுப்பான வாரம் என்றே கூறலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top