சகோதரனின் 10 வயதுடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, குற்றவாளிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அதனை செலுத்த தவறினால் குற்றவாளிக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு கண்டி - மஹாமுல்கம பகுதியில், குறித்த 10 வயதுடைய சிறுமியை அவர் பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், 37 வயதுடைய குறித்த சந்தேகநபருக்கு எதிராக 3 வழக்குகளின் கீழ் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.