உச்சத்தில் இருந்த போதே பல படங்களில் இருந்து நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்..!!

tubetamil
0

 முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் 1997-ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் அவர் அதே ஆண்டு பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் ஐஸ்வர்யா ராயின் முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம் என்றால் அது ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படம் தான்.

இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. Hum Dil De Chuke Sanam, Devdas,  Mohabbatein, Taal என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்தார்.இதனிடையே தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்தா. மேலும் சில ஹாலிவுட் படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.திரையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே உச்ச நடிகையாக மாறிய ஐஸ்வர்யா ராய் ஹிந்தியில் ஷாருக்கான், சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன் என பல உச்ச நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். மேலும் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாகவும் மாறினார். ஆனால் அவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருந்த போது பல பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரிடம் பறிக்கப்பட்டது. குறிப்பாக அந்த காலக்கட்டத்தில் சல்மான் கானை காதலித்து வந்த ஐஸ்வர்யா ராய் அவருடன் பிரேக் அப் செய்த பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் பேசும் பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஐஸ்வர்யா ராய் வீர் சாரா உள்ளிட்ட 3 படங்களில் நான் ஷாருக்கானுடன் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் அந்த படங்களில் நடிக்கவில்லை. திடீரென என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அதே போல் சல்தே சல்தே படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நான் முடிவு செய்யவில்லை.. என்றும் ஐஸ்வர்யா ராய் கூறினார். ஆனால் பெரிய படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருந்ததாகவும், அதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறினார்.அதே போல் சல்தே சல்தே படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நான் முடிவு செய்யவில்லை.. என்றும் ஐஸ்வர்யா ராய் கூறினார். ஆனால் பெரிய படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருந்ததாகவும், அதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறினார்.ஆனால் இன்று இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். பாலிவுட்டின் வலிமையான பெண் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.ஐஸ்வர்யா ராய் கடைசியாக பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. மணி ரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படத்திலும் ஐஸ்வர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top