அடுத்துவரும் சில வருடங்களுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவை அடுத்துவரும் 25 வருடங்களில் அபிவிருத்தி அடைந்த நாடாகக் கட்டியெழுப்புவதே எங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகின் பல நாடுகளது தலைவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியா 100 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அபிவிருத்தி அடைந்த நாடாகத் திகழ வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் நாம் சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறோம். அதன் பயனாக எமது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமடைந்துள்ளது என்றார்.