கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நீர்பாசன வாய்க்கால் பகுதியல் விபத்து இடம்பெற்ற அடையாளங்களுடன் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த வாய்க்கால் பகுதியில் இரண்டு தலை கவசங்கள், 2 சோடி பாதணிகள் காணப்படுவதால் இருவரது சடலம் காணப்படலாம் என நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.