கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்..!!

tubetamil
0

 கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இதேவேளை, அலுவலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top