முல்லைத்தீவு குமுழமுனையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டுப் பிரார்த்தனை..!!

tubetamil
0

 குமுழமுனையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டுப் பிரார்த்தனை ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.


முல்லைத்தீவு  குமுழமுனை கிராமத்தில் வசிக்கும் அறநெறி மாணவர்களுக்கு 
சிறீ கிருஷ்ணா சைத்தணிய பக்தி கழகம் கொழும்பு விஸ்வேஸ்வரதாஸ் தலைமையிலான தொண்டர்களினால் இன்றையதினம் (27.01.2024) காலை 10.30 மணியளவில் சனாதன தர்ம விழிப்புணர்வு கூட்டுப் பிரார்த்தனை ஒன்று முல்லைத்தீவு குமுழமுனை மத்தி பொதுநோக்கு மண்டபத்தில் இரண்டு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

சிவசேனை அமைப்பின் இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவனின் ஏற்பாட்டில் அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர் வசந்தமலர் அவர்களின் தலைமையில் ஆரம்பமான குறித்த பிரார்த்தனை நிகழ்வில் விஸ்வேஸ்வரதாஸ் தலைமையிலான தொண்டர்கள்
குன்றின் மேல் குமரன் அறநெறி பாடசாலை மற்றும் கற்பக விநாயகர் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கான அப்பியாசக் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top