யாழ்ப்பாணம் - வல்வை உதயசூரியன் கடற்கரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் 60ற்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டு இருந்தன.
போட்டியில் முதலாம் இடத்தினை, "ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த வினோதன் பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் இடத்தினை " விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கை கோள்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை , அந்த பட்டத்தினை வடிவமைத்த பிரசாந்த் பெற்றுக்கொண்டார்.
மூன்றாம் இடத்தினை " ஏலியன்ஸ் மர்ம தாக்குதல் விமானம்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த கம்ஸன் பெற்றுக்கொண்டார்.