பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் சந்திப்பு

keerthi
0

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று (26) காலை 10.00 மணியளவில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளன.  

மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச்சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top