மாணவியின் தவறான முடிவால் தவிக்கும் குடும்பம்..!!

tubetamil
0

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில், சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார்.

வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள், அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top