வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படும்..!

keerthi
0


தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் உடலானது எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அவரது சகோதரர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 எனினும்இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், வெள்ளிக்குப் பிறகே சாத்தியம் தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு செய்தி தான் தேவையே தவிர அதன் உறுதித் தன்மை முக்கியமில்லை எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது முகநூலில் தன்னுடைய தாயை பார்க்க வருபவர்கள் இரு தினங்கள் கழித்து வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இவ்வாறுஇருக்கையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த  சாந்தன் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில்  நேற்று(28)உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top