முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..!!

tubetamil
0

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று (17.02.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்து வருபவர்  நேற்று மாலை கள்ளினை இறக்கி தவறணைக்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த உந்துருளி மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top