நான்கு உடும்புகளுடன் மூவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது..!!

tubetamil
0

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூவரை உடும்புகளுடன் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.



நேற்று (25.02.2024) மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டார பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்பட்ட  27,27,55 அகவையுடைய மூவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளன சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் புதுக்குடியிருப்பு பொலிசார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top