அண்மைய காலங்களில் அதிகரித்திருந்த காய்கறி விலைகளுடன் ஒப்பிடுகையில், பேலியகொட புதிய மெனிங் சந்தையில் காய்கறி விலைகள் இன்று குறைந்துள்ளன.
அதன்படி, ஒரு கிலோ கரட்டின் விலை ரூ. 700, பீன்ஸ் ரூ. 500 ஆக இருப்பினும், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் ஆகியவை முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 1,100 என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பேலியகொடை புதிய மெனிங் சந்தையிலும் இன்று மீன் விலையும் குறைந்துள்ளது.