2024ஆம் ஆண்டிற்கான புதிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மில்பர் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் புத்தசாசன மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் நேற்று முன்தினம் (12) அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வருடத்திற்கான ஹஜ் கமிட்டியின் தலைவராக இப்றாஹீம் அன்ஸார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய கமிட்டி உறுப்பினர்களாக இபாஸ் நபுஹான், மொஹமட் ஹனீபா இஷாக், நிப்ராஸ் நஸீர் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் இஸட். ஏ.எம். பைசாலும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக மில்பர் கபூர் நியமனம்..!!
February 14, 2024
0
Tags
Share to other apps