தாய்லாந்து பிரதமர் தக்சினுக்கு பரோல்..!!

tubetamil
0

 தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ஞாயிற்றுக்கிழமை (18) விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தற்போதைய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உறுதிப்படுத்தினார்.

ஷினவத்ரா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 இந்த வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சிற தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக 15 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து கடந்தாண்டு நாடு திரும்பினார் தக்சின். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 2023 ஆம் ஆண்டு முதல் அவர் சிறையில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பாங்காங் சிறையிலிருந்து ஆறு மாதங்கள் மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நலக் குறைபாடு காரணமாக 8 ஆண்டு சிறைத் தண்டனையை மகா வஜிரலோங்கோர்ன் மன்னர் ஓராண்டாக குறைத்தார். இந்த வாரத் தொடக்கத்தில் தக்சினுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top