ரஷ்யா எதிர்க் கட்சித் தலைவர் காலமானார்..!!
February 17, 2024
0
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி இன்றைய தினம் (16) உயிரிழந்துள்ளார். புடினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கமைய, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. மேலும், அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
Tags
Share to other apps