சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களினால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு திடீரென அரிய வகை நோய் பாதிக்கப்பட்டு இருந்தது.
இப்போது அதில் இருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சமந்தா இப்போது தனியாக இருப்பது அவரது குடும்பத்தை மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சமந்தாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
அதுவும் அவரது நெருங்கிய உறவினர் இடத்தில் மாப்பிள்ளை பார்க்க குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் சமந்தாவும் தான் ஆரம்பத்தில் படங்களில் நடித்த ஒரு நடிகருடன் அப்போது கிசுகிசுக்கப்பட்டார். அந்த வாரிசு நடிகரும் தற்போது வரை திருமணம் ஆகாமல் சிங்கிளாக தான் சுற்றி வருகிறார்.சினிமாவிலும் தொடர் பிளாப் படங்களை கொடுத்து வரும் அந்த ஹீரோ இப்போதும் சமந்தாவுடன் காண்டாக்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அதே பழைய நட்புடன் பழகி வருவதால் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேச தொடங்கி விட்டனர்.
ஆனால் சமந்தா தனது இரண்டாம் திருமணத்தை குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவர் கையில் தான் இருக்கிறது. மேலும் சமந்தாவின் குடும்பம் ஏதாவது நல்லது நடந்தால் சரிதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஆகையால் சமந்தாவுக்கு விரைவில் டும் டும் நடக்கும் என்ற ஆசையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.