நாள் வலைத்தொழில் இன்று நாகர்கோவிலில் ஆரம்பம்..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இன்று 2024 மஹ ஆண்டிற்க்கான நாள் வலை தொழில்11.02.2024 இன்று திங்கட்கிழமை  சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது


இதில் மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை இன்று ஆரம்பித்தனர்.

தமிழரின் தை மாத நாளின் இறுதி நாளான இன்று வருடாவருடம் இந் நாள் தொழில் ஆரம்பிப்பது வழமையாகும்.

குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மீனவர் ஒருவர் 09 நாளாக  நாகர்கோவில் நாக தம்பிரானுக்கு விரதம் இருந்து சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் கரைவலை மீன்பிடி நாள்தின நிகழ்வினை ஆரம்பித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top