சூப் விவகாரம் குறித்து சினமன் லேக்சைட் அறிக்கை..!!

tubetamil
0

  

கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சூப் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சமீபத்திய செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஸ்தாபனம் சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு அறிக்கையில், குறித்த சம்பவம் உணவகத்தில் பரிமாறப்பட்ட சூப்புடன் தொடர்பில்லாதது என்று தெளிவுபடுத்தியதுடன், விருந்தினர் தனது சூப்பில் வெள்ளை மிளகை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Cinnamon Lakeside Colombo அவர்களின் விசாரணைகளின் போது சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் (PHIs) தீவிரமாக ஒத்துழைத்துள்ளது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட வெள்ளை மிளகின் அதே தொகுதியில் தனது சொந்த சோதனைகளை நடத்தியதாகவும் அதி பாவனைக்கு உகந்த பொருள் எனவும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

"அந்த நாளில் உணவகத்திலிருந்து இதுபோன்ற வேறு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை" என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், Cinnamon Lakeside Colombo சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top