புத்தளம் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய ஜி.ஜி.அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த நாள் விழாவின் போது இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த கொலைக்கான காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.