காதலனுக்காக பெண்ணாக மாறிய ஆண்..!!

tubetamil
0

 28 வயது இளைஞர் ஒருவர், திருமணத்திற்குத் தனது ஆண் துணையின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் வசிக்கும் புகார்தாரர், குற்றம் சாட்டப்பட்ட வைபவ் சுக்லா என்பவருடன் 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராகியுள்ளார்.


பின்னர் தாங்கள் இருவரும் பின்னாட்களில் காதலித்ததாகவும், பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே தன்னை திருமணம் செய்து கொள்வதாக வைபவ் சுக்லா நிர்பந்தித்ததாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுக்லாவின் நிர்பந்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டவர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சுக்லா தனது வாக்குறுதியை மீறி, தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என பாதிக்கப்பட்ட நபருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

மேலும், சுக்லா அவரை இயற்கைக்கு மாறான செயல்களுக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

‘சுக்லாவின் வேண்டுகோளின்படி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என நம்பினேன். இருவரும் உண்மையாகதான் காதலித்தோம். ஆனால், அவர் தனது வாக்குறுதியை மீறியது மட்டுமல்லாமல், இயற்கைக்கு மாறான செயல்களுக்கும் என்னை உட்படுத்தினார்’ என்று பாதிக்கப்பட்டவர் மனம் உடைந்து பேசியுள்ளார்.

அதன்பின்னர், இந்த எதிர்பாராத திருப்பத்தை எதிர்கொண்ட பாதிக்கப்பட்டவர், விஜய் நகர் பொலிஸில் புகார் அளித்தார்.

அறுவைசிகிச்சைக்காக செய்யப்பட்ட செலவுகள் மற்றும் சுக்லா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தினார்.

விஜய் நகர் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் சந்திரபால் சிங், பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தியதாக கூறினார். மேலும், திருமணத் திட்டத்தை கைவிடுவதை பாதிக்கப்பட்டவர் எதிர்த்தபோது சுக்லா மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருடன் இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வைபவ் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம்’.

குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக விஜய் நகர் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் சந்திரபால் சிங் கூறினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top