ஆறு மாணவர்களுக்கு விளக்கமறியல்..!!

tubetamil
0

 சப்ரகமுவ பல்கலைக்கழக, விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவி ஒருவரையும்,  இரு மாணவர்களையும்  தாக்கிய சம்பவம் தொடர்பில் புதன்கிழமை (14) கைது செய்யப்பட்ட ஏனைய சிரேஷ்ட மாணவர்கள் 6 பேரையும் வியாழக்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொட நீதவான் ஹெஷானி ரொட்ராகோ உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இரவு உணவகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்


,  இதில் ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 7  சிரேஷ்ட மாணவர்களையும்  புதன்கிழமை  (14)  பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களையும் வியாழக்கிழமை (15)  வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top