சந்தேகநபர்களுக்கு விஷ பானம் கொடுத்த இருவர் கைது..!!

tubetamil
0

 ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தினுள் சந்தேகநபர்கள் இருவருக்கு விஷ பானம் வழங்கிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும் மற்றுமொரு சந்தேகநபரும் இவ்வாறு  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 7ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை பார்வையிட வந்த நபர் ஒருவர் இந்த விஷம் கலந்த பானத்தினை கொடுத்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (15) பிற்பகல் வத்தளை மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 25 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top