வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பூவரசன்குளம் பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்தபோதே இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல பொருள்கள் மீட்கப்பட்டன என்றும், 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் அவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் எனப் பல வகையான பொருள்களைத் திருடிய சம்பவங்களுடன் இருவரும் தொடர்புபட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பெருந்தொகைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.