திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பரிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன் (33வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நண்பருடன் தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் இருவரும் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து நண்பரை பாதுகாக்க முடியாத நிலையில் நீந்தி கரைக்கு வந்ததாகவும் சக நண்பர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.