நீர் வழங்கல் துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை கடனாக பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அந்த நிதி முதலாவது உப வேலைத் திட்டத்திற்கான கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கடனாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் இரண்டாவது உப வேலைத் திட்டத்தின் கீழ் மேலும் 100 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 75 வீதம் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமானவற்றை முன்னெடுப்பதற்கு மேற்படி நிதி உறுதுணையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.