தந்தையின் தொல்லையால் 2 மகள்மார் பாதிப்பு..!!

tubetamil
0

  தந்தையின் தொல்லை காரணமாக   பாடசாலை மாணவிகள் இருவர், நன்னடத்தை கண்காணிப்பின் கீழ்  பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தினமும் மதுபோதையில் வருகை தரும் தந்தையினால் ஏற்படும் துன்புறுத்தல் காரணமாக பாடசாலை மாணவிகள் இருவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களை நன்னடத்தை மேற்பார்வையின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  என திம்புள்ள-பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேயிலை தோட்டத்தில் வசிக்கும் 16 மற்றும் 14 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளின் தாயார் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அவ்விரு பெண் பிள்ளைகளும்  பாட்டியின் பராமரிப்பிலேயே இருக்கின்றனர் என திம்புள்ளை- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.  

தந்தை தினமும் மைதானத்திற்கு மது போதையில் வந்து பாட்டி மற்றும் இருவரையும் திட்டி திட்டியதாகவும், அந்த நிலை காரணமாக மிகுந்த அச்சத்துடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும் பாடசாலை மாணவிகள் இருவரும் திம்புள்ள- பத்தனை பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

தந்தையால் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் திம்புள்ள- பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தோட்டத்திற்குச் சென்று மாணவிகள் இருவரையும் பாட்டியையும் வெள்ளிக்கிழமை (08) பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இரு மாணவிகளும் டிக்கோயா- கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top