ஏழு மாடி கட்டடத்தில் தீ விபத்து: 43 பேர் உயிரிழந்த சோகம்..!

keerthi
0


வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது.

அத்தோடு அந்த கட்டத்தில் மேலும் சில ரெஸ்டாரன்ட்கள், துணிக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளனர்.

35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அத்தோடு     அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்     இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

அத்தோடு     22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top