72 நாட்களில் 21 கொலைகள்..!!

tubetamil
0

 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


அத்துடன், 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top