நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி நேற்றுமாலை அவரது நண்பியுடன் நீராடிக்கொண்டு இருக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார். இதன்போது குறித்த நண்பி அபயக் குரல் எழுப்பிய வேளை அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top