அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் காயம்..!!

tubetamil
0

 கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு கொள்கலன் லொறி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றுக்குமிடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.


கொள்கலன் வாகனம் மாத்தறையில் இருந்து கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பயணித்த கெப் வாகனம் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top