வத்தளை - பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்யச்சென்ற வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று இரவு தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது, சியத்த கங்குல பகுதியில் வைத்து திடீரென சுகவீனமுற்றுள்ளார்.
இந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
இவ்வாறு மரணித்தவர் வத்தளை பகுதியில் இருந்து தனது குடும்பத்துடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 80 வயதுடைய சுமணாவதி ஆவார்.
சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.