இரண்டு மாங்களுக்கு முன்னர் கனடா சென்ற இலங்கையரும் படுகொலை

keerthi
0

 
கனடாவின் ஒட்டாவா நகரில் கொல்லப்பட்ட இலங்கையர் ஆறுபேரில் அமரகூன்முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(40) என்பவர் கனடாவிற்கு வந்து இரண்டுமாதங்களே என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு    இவர் தனது நண்பரான தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை வளப்படுத்தும் வகையில் கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள Mudiyanselage முயற்சித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.இது அவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top