சீனாவுடன் மாலைதீவு பாதுகாப்பு ஒப்பந்தம்..!!

tubetamil
0

 இந்திய துருப்புகளை வெளியேற உத்தரவிட்ட மாலைதீவு, சீனாவுடன் இராணுவ உதவி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக அதிகாரிகள் நேற்று (05) தெரிவித்தனர்.

சீன ஆதரவு ஜனாதிபதி முஹமது முயிசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததை அடுத்து மாலைதீவில் நிலைகொண்டுள்ள இந்திய துருப்புகளை வெளியேற உத்தரவிட்டார். அதன்படி அங்கு நிலைகொண்டிருக்கும் சுமார் 89 இந்தியப் படையினர் வரும் மே 10 ஆம் திகதி வெளியேறவுள்ளனர்.


இந்நிலையில் சீனாவின் இராணுவ உதவியை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை மாலை கைச்சாத்திட்டதாக மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இலவசமானது அல்லது கொடுப்பனவுகள் இல்லாத அல்லது கட்டணம் இல்லாததாக இருந்தது என்றும் அது கூறியது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் சீனாவுக்கு இராணுவ உதவிகளை இலவசமாக வழங்க சீனா இணங்கியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் முனுமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புகளுக்கான அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸாங் பாவோகுன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த செப்டெம்பரில் இடம்பெற்ற தேர்தலில் முயிசு ஜனாதிபதியாக தெரிவானது தொடக்கம் இந்தியா மற்றும் மாலைதீவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top