போக்குவரத்து சட்டங்களை மீறுவோர் தரவு தொகுதிக்கு உள்வாங்கப்படுவர்..!!

tubetamil
0

 வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 முதல் வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி செயற்படும் சாரதிகளின் தகவல்கள், தரவு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தண்டப் பணம் செலுத்தும் தபால் நிலையங்கள் ஊடாக குற்றத்தின் தன்மை, குறித்த பொலிஸ் நிலையத்தின் தகவல்கள், சாரதி அனுமதிப்பத்திர தகவல்கள் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இவ்வாறு தரவு தொகுதிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top